Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledஅச்சுவேலியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் மாணவர்கள் கும்பலதாக சேர்ந்து ஆசிரியரை மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.இந்த விடயம் பொலிசாரிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து. பாடசாலைக்கு சென்ற பொலிசார் மாணவர்களை எச்சரித்ததுடன் ஆசிரியரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் வைத்துள்ளனர்.

பாடசாலை வேளையில் மாணவர் கும்பலொன்று அனுமதி பெறாமல் வெளியில் சென்று  திரும்பியுள்ளது.இவர்களை அவதானித்த ஆசிரியர் ஒருவர் எங்கு சென்று வருகிறீர்கள் என கேட்டுள்ளார்.இந்த கேள்வியினால் ஆத்திரமடைந்த மாணவர் கும்பல் ஒன்றுதிரண்டு ஆசிரியரை மிரட்டியதுடன் தாக்கவும் முற்பட்டது. தப்பினேன் பிழைத்தேன் என ஆசிரியர் அவர்களிடமிருந்து ஓடித்தப்பிவிட்டார்.

உடனடியாக விடயம் பொலிசாரிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து வரைந்து சென்ற பொலிசார் மாணவர் கும்பலை பிடித்து எச்சரித்தனர்.பின்னர் பகிரங்கமாக ஆசிரியர் முன்னிலையில் அவர்களை மன்னிப்பு கேட்க வைத்தனர்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து செல்வது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்