உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி எல்லைவீதியில் உள்ள வீடு ஒன்றினுள் இருந்து நேற்று இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த இருவரும் தாயும் மகனும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆரையம்பதி எல்லைவீதியைச் சேர்ந்த 79 வயதுடைய செல்லத்தம்பி சிவபாக்கியமும் அவரது மகனான 50 வயதுடைய செல்லத்தம்பி அமிர்தகுமாருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி, என்.எம்.அப்துல்லாஹ் சடலங்களை பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை அமிர்தகுமார் சிறுநீரக நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் அதேபோல் தாயும் மிக நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்தார் எனவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்