உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்untitledயாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் திகதி பெற்றோல் குண்டுகள். தடிகம்புகள், கோடரி பிடிகள், பொல்லுகள் சகிதம் கைது செய்யப்பட்ட இளைஞர்களுடன் யாழ்.

பல்கலைக்கழக மாணவன் ஒருவர், இருந்தது ஏன் என, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுன்னாகம் பகுதியில் இவ்வாறான பத்து இளைஞர்களை பொலிசார் கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததையடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்த 10 பேரில் ஒருவர் பாழ் பல்கலைக்கழக மாணவன் என தெரிவித்து, அவர் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியிருப்பதனால், அவரை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவைப் பரிசீலனை செய்த போதே, நீதிபதி இளஞ்செழியன், வீதியில் ஆயுதமேந்தியிருந்த குழுவினருடன் பல்கலைக்கழக மாணவனுக்கு என்ன வேலை என வினவியிருந்தார்.

பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள பத்துப் பேரும், பெற்றோல் குண்டுகள், மற்றும் கோடரி பிடிகள், பொல்லுகள் சகிதம் அபாயகரமான ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால், அந்த மாணவனின் பிணை மனுவை உடனடியாகப் பரிசீலனை செய்து பிணை வழங்க முடியாது என தெரிவித்து, நீதிபதி விசாரணையை பிற்போட்டுள்ளார்.

இந்த மாணவன் பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகள் குறித்து, மல்லாகம் நீதிமன்றத்தில் உரிய கட்டளையைப் பெற்றுச் செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ள நீதிபதி இளஞ்செழியன், பிணை மனு மீதான விசாரணையை, ஜுலை மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இந்த மாணவன் பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகள் குறித்து, மல்லாகம் நீதிமன்றத்தில் உரிய கட்டளையைப் பெற்றுச் செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ள நீதிபதி இளஞ்செழியன், பிணை மனு மீதான விசாரணையை, ஜுலை மாதம் 30ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்