உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledவலி. வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை நகுலேஸ்வரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள சுமார் முப்பத்தைந்து ஏக்கர் காணி மக்களின் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கீரிமலை மாவிட்டபுரம் வீதியில் அமைந்துள்ள குறிப்பிட்ட காணிகள் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டு அவர்களின் வசம் இருந்தன.

இன்று  காலையில் கடற்படையினரால் குறிப்பிட்ட பிரதேசத்தில் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலி. வடக்கு பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபையின் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து உடனடியாக குறித்த பகுதிக்குச் சென்ற பிரதேச செயலாளரும் பிரதேச சபைத் தலைவரும் மக்கள் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைளை மேற்கொண்டனர்.

மேலும் உள்ளூராட்சி அமைச்சினால் வலி.வடக்கு பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் பற்றைகளை துப்புரவு செய்யும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்