உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்untitledஇலங்கை அரசின் உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும் சர்வதேச விசாரணை மூலமே தீர்வு கிடைக்கும் என்றும் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட போர்க்குற்ற விசாரணை அறிக்கை செப்டம்பரில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி போர்க்குற்ற விசாரணை தொடரும் என்றும் அதன் காரணமாகவே மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுகின்றார் என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் விசாரணை தேவை என்று தாம் தொடர்ந்து வலியிறுத்தி வருவதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இறுதி யுத்தத்தின்போதும் அதற்குப் பின்னராக காலத்திலும் நடந்தபடுகொலைகள் தொடர்பிலும் அநீதிகள் தொடர்பிலும் உண்மைகள் வெளிவரவேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை போர்க்குற்றம் இடம்பெற்றதற்கான காரணத்தை அறிவதன் ஊடாகவே தமிழ் தேசிய  இனத்தின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த அரசு சர்வதேச விசாரணைக்கு இணங்கவில்லை என்றும் தற்போதைய அரசு என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறிய அவர் சர்வதேச விசாரணை கூட்டமைப்பு வலியுறுத்தி சர்வதேச நாடுகளுடன் பேசும் என்றார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்