உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்untitledதுருக்கி நாட்டில் உள்ள கலாச்சார மையம் ஒன்றில் சற்று முன்னர் நிகழ்ந்த பயங்கர வெடி குண்டு தாக்குதலில் 27 பேர் வரை பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கி மற்றும் சிரியா எல்லைகளுக்கு அருகே உள்ள Suruc என்ற நகரில் அமைந்துள்ள Amara கலாச்சார மையத்தில் தான் இந்த வெடி குண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

இந்த தாக்குதலில் தற்போது வரை சுமார் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Suruc நகரிலிருந்து 10 கிலோ மீற்றர் தொலைவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள Kobani நகர் உள்ளதால், இந்த வெடி குண்டு தாக்குதல் ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயலாக இருக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், கொபனி நகர் மக்களை மீட்பதற்காக Socialist Youth Associations Federation (SGDF) என்ற அமைப்பை சேர்ந்த 300 சமூக ஆர்வலர்கள் கலாச்சார மையத்தில் கூடி சற்று முன்னர் ஆலோசனை கூட்டம் நடத்தியபோது இந்த வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

வெடிகுண்டு தாக்குதலில் பல நபர்கள் பலத்த காயம் அடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்