உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledவடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் இணைந்திருப்பதுவே எமக்குப் பலம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற கட்சி செயற்பாட்டாளர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

திருகோணமலையில் தமிழர்களும் முஸ்லீம்களும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் இதன்போது சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு திருகோணமலையில் மூன்று ஆசனங்கள் கிடைக்கும் பட்சத்தில் அதில் ஒரு ஆசனத்தை முஸ்லீம்களுக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மத்திய அரசாங்கத்தில் இணைவதால் முஸ்லீம்களுக்கு எதிர்காலம் கிடைக்கப்போவதில்லை என்றும் பிராந்திய அரசாங்கத்திலேயே அவர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது என்றும் கூறினார்.

அஷ்ரப்பின் மறைவுக்குப் பின்னர் முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தடம் மாறியுள்ளதாகவும் தற்போது திருகோணமலையில் தனித்துப் போட்டியிடாது பெரும்பான்மையினருடன் சேர்ந்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

இதேவேளை அன்று மகிந்த ராஜபக்சவுடன் முஸ்லீம் காங்கிரஸ் ஒட்டிக்கொண்டிருந்தபோதே பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டதாக கூறிய அவர் சர்வதேச அளவில் முஸ்லீம்களின் பிரச்சினையை தாம் எடுத்துச் சென்றதாகவும் சம்பந்தன் மேலும் கூறினார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்