உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledகத்தரிக்காய் ரோல்

பொருட்கள்தேவை

கத்தரிக்காய் – 100 கிராம்,

வேர்க்கடலை – 50 கிராம்,

எண்ணெய்தேவையான அளவு,

காய்ந்த மிளகாய் – 5,

கடலைப் பருப்பு – 25 கிராம்,

வெள்ளை எள் – 25 கிராம்,

உப்புதேவையான அளவு,

சோள மா – 2 டீஸ்பூன்,

அரிசி மா – 2 டீஸ்பூன்,

கடலை மா – 2 டீஸ்பூன்,

பிரெட் தூள்தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

 

கத்தரிக்காய்களை நன்கு கழுவி காம்புடன் குறுக்குவாக்கில் வெட்டி வேக வைத்துக் கொள்ளவும்.தாச்சியில் கடலைப் பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் மற்றும் எள் ஆகியவற்றை எண்ணெயின்றி வறுத்துக் கொரகொரவென அரைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் கடலை மா, அரிசி மா, சோள மா மற்றும் உப்பு சேர்த்து பஜ்ஜி மா பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் போதுமான அளவு எண்ணெய் விட்டு வேகவைத்த கத்தரிக்காயில் அரைத்துவைத்த பொடியை கத்தரிக்காயின் நடுவில் பரப்பி மாவில் தோய்த்து பிரெட் தூளில் புரட்டி போட்டு எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்