உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஇந்தியாவின் முன்னாள்  ஜனாதிபதி அப்துல் கலாம்  இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 83 வயது, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சில்லோங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து இராணுவ மருத்துவர்கள் விரைந்து வந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார்.

83 வயதான இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மலேசியாவில் சில்லொங்கில் உள்ள இந்திய முகாமைத்துவ நிறுவகத்தில் விரிவுரை நிகழ்த்தியபோது மயங்கி வீழ்ந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர் மலேசியாவின் மேஹாலயாவில் உள்ள சில்லோங் தனியார் வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

அப்துல் கலாம் 2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டுவரை இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பதவிவகித்தார்.

1931ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி அப்துல் கலாம், தமிழகம் ராமேஸ்வரத்தில் படகுகட்டும் தொழிலாளியின் மகனாக பிறந்தார்.

இந்த நிலையில் இந்தியாவின் பிரசித்த விஞ்ஞானியாக கருதப்படும் அவர் 1998ஆம் ஆண்டு பொக்ஹ்ரான் இரண்டு அணு பரிசோதனையை நடத்தியதில் முக்கிய பங்கை வகித்தார்.

இதன்மூலம் இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று அவர் அழைக்கப்பட்டார்.

அப்துல் கலாம் இந்திய புகழ்மிக்க பத்மபூசன், பாரத் ரத்னா விருதுகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்