உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சிவகாசி, ஜன.21: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.

விருதுநிகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது பெரிய வாடியூர். இங்கு தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் இன்று காலை கடும் சப்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 6 பேர் பலியாகினர். மேலும் 14 பேருக்கு தீக் காயங்கள் ஏற்பட்டன.

பலியானவர்களின் உடல்கள் விருதுநகர் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேன்சி ரக பட்டாசுகளுக்கு வெடிமருந்து செலுத்தும்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் ஆலையில் இருந்த பட்டாசு தயாரிக்கும் 6 அறைகள் தரைமட்டமாயின.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்