உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளது.எதிர்வரும் மாதத்தில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பான் கீ மூனை சந்திக்க உள்ளார்.
அமைதியான முறையில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டமைக்காக பான் கீ மூன், ஜனாதிபதிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு சமாந்திரமாக, ஜனாதிபதியை சந்திக்க விரும்புவதாக மூன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்