உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டகத்தி தினேஷ் ஆகியோருடன் தன்ஷிகாவும் நடிக்கிறார்.

இதில் அவருக்கு போதையின் பிடியில் சிக்கிய இளம் மாணவி வேடம் என்றார்கள். ரஜினியின் மகளாக நடிப்பதாகவும் தகவல் உள்ளது.

ரஜினி படத்தில் நடிப்பது குறித்து பேசிய தன்ஷிகா,

“நான் சின்ன வயது முதலே ரஜினிகாந்தின் தீவிர ரசிகை. அவர் நடிக்கும் எல்லா படங்களையும் பார்த்து விடுவேன். அவருடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. என் சினிமா வாழ்க்கையில் இதை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. கடவுளுக்குத்தான் நன்றி” என்றார்.

ரஜினியின் மகளாக நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்தவர், “எனக்கு தெரியாது. என்ன வேடம் என்று என்னிடம் சொல்லவில்லை” என்றார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்