Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledகனடாவின் கியூபெக் நகரின் வடக்கு பகுதியில் இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த விபத்து  ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது விமானி ஒருவர் மற்றும் ஐந்து பயணிகள் என மொத்தம் ஆறு பேர் விமானத்தில் பயணம் செய்ததாக கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து அதில் பயணித்தவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர்.  இதுவரை நான்கு பேரின் உடல்கள் உயிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.ஏனையவர்களைத் தேடும் பணியில் மீட்புப் பணியினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேடுதல் பணிக்காக விஷேட ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்