உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இவர்கள் அனைவரும் மூச்சு திணறல் ஏற்ப்பட்டு இறந்துள்ளதாக இத்தாலிய செயதிப்பிரிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் 430 பேர் சுவிடன்நாட்டு கடலோர காவல் படையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.கடந்த சில தினங்களாக லிபியாவிலிருந்து புறப்பட்டுவரும் படகுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் சடலமாகவும், பலர் உயிருடனும் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இத்தாலிய கடலோரக்காவலர்கள் சுமார் 10 படகுகளை லிபிய கடலோரப்பகுதியில் இருந்து மீட்டதாக தெரிவித்தனர்.கடந்த மாதங்களிலும் இத்தாலிய கடலோரக்காவலர்களால் 49ற்கும் அதிகமானோரின் சடலங்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கடத்தல்காரர்களிடமிருந்து உயிர்தப்பிய சிலர் ஏனையோரின் இறப்புக்கு மூச்சுத்திணறல் தான் காரணமாக இருக்கும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தில் 2,000 மேற்பட்ட கடல் மார்க்கமாகப் புலம்பெயர்ந்த 2,000 மேற்பட்ட மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக ஐரோப்பாவும் ஐக்கிய நாடுகள் சபையும் தெரிவிக்கின்றன.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்