தமிழில் எழுத
பிரிவுகள்


imagesORCQ1RSCநாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் சந்தர்ப்பத்தில் உலக நாடுகளின் வரிசையில் இலங்கை 131ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.சர்வதேவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் ருவன்டா 63.8 வீதத்தைப் பெற்றுள்ளதுடன், 53.1 வீதத்தைப் பெற்றுள்ள பொலிவியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த தரப்படுத்தலில் 5.8 சதவீதத்தைப் பெற்றுள்ள இலங்கை 131ஆவது இடத்தில் காணப்படுகின்றதோடு, 12 வீதத்தைப் பெற்றுள்ள இந்தியா 107ஆவது இடத்தில் உள்ளது.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பில் இறுதி இடத்தில் மிக்ரோனேஷியா காணப்படுகின்றது.

இலங்கை நாடாளுமன்றத்திற்கு இம்முறை 13 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசியல் வரலாற்றில் அதிகளவான பெண்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்