உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அடுத்த மாதம் 14ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக, செயிட் ராட் அல் ஹுசேன் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது பணியகம் நடத்திய விசாரணை அறிக்கையை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நேரில் கொண்டு வந்து இலங்கை ஜனாதிபதியிடம் கையளிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக இந்த அறிக்கை கடந்த 21ஆம் திகதி இலங்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்