Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்



dynamite_clock_002கனடா நாட்டு விமான நிலையத்தில் 15 வயது சிறுமி ஒருவர் வெடிகுண்டு வடிவிலான நவீன கடிகாரத்தை கொண்டு வந்து பொலிசாரை நீண்ட நேரம் திணறடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டொரோண்டோ மாகாணத்தில் உள்ள பியர்சன் விமான நிலையத்திற்கு கடந்த சனிக்கிழமை இரவு 15 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார்.

பயணிகளின் உடமைகளை பரிசோதிக்கும் எந்திரத்தில் அந்த சிறுமியின் கைப்பையை வைத்துள்ளனர்.

அப்போது, எந்திரம் வெடிகுண்டுக்கான எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளது.

உடனே பரபரப்பான பொலிசார் சிறுமியை தனியாக அழைத்து சென்றதுடன் வெடிகுண்டுகளை செயலிழக்கும் நிபுணர்களை அழைத்துள்ளனர்.

சிறுமியின் கைப்பையை சோதனை செய்தபோது அதன் உள்ளே, டைனமைட் குச்சிகளை இணைத்தவாறு வெடிகுண்டு வடிவில் புதுமையான கடிகாரம் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர்.

கடிகாரத்தை சோதனை செய்தபோது, அது போலியானது என்றும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக வெடிகுண்டு மாதிரியான கடிகாரத்தை சிறுமி கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.

சிறுமியின் நடவடிக்கையை கண்டித்த பொலிசார், அவர் மீது குறும்பு செய்து பொலிசாரை அலைய விட்ட குற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், அந்த வெடிகுண்டு வடிவிலான கடிகாரத்தை தனது இணையத்தளத்தில் வெளியிட்ட பொலிசார், இதுபோன்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் கடிகாரத்தை விமான நிலையத்திற்கு கொண்டு வருவது தவறு என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், பொலிசாரின் இந்த நடவடிக்கைக்கு சில சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வெடிகுண்டு வடிவிலான கடிகாரத்தை தயாரிக்க அனுமதி அளித்தவர்கள் மற்றும் அதனை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சிறுமி மீது நடவடிக்கை எடுப்பது தவறாகும்.

அமேசான் போன்ற ஓன்லைன் நிறுவனங்களில் தற்போது இதுபோன்ற புதுமையான அதேசமயம் ஆபத்தை விளைவிக்கும் பல பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதுமாதிரியான பொருட்களை உடனடியாக தடை செய்ய நடவடிக்கை எடுக்காமல், அதனை பயன்படுத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்