உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஅவன் கார்ட் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.காலி துறைமுகத்தில் காணப்பட்ட மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் அவன்கார்ட் நிறுவனத்திற்கு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.இன்றைய தினம் இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை கொழும்பு நீதிமன்றில் நடைபெற்றது.
இந்த மனு மீதான விசாரணைகளை தள்ளுபடி செய்ய கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றிடம் வழக்கை தொடர விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.வழக்கைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்ததாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

அவன் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதிக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையும் நீக்கப்பட்டுள்ளது.நிசாங்க சேனாதிபதி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்