தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


nose_china_002சீனாவில் கணவர் அழைத்தபோது போனை எடுத்து பேசாத காரணத்தினால் மனைவியின் மூக்கை கடித்து தின்றுவிட்டதாக மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.கிழக்கு சீனாவின் சாங்டோங் மாகாணத்தை சேர்ந்த யாங் என்ற பெண்மணியின் கணவர் சமீபத்தில் ஒரு நாள் இரவு 2 மணியளவில் போன் செய்துள்ளார்.

அப்போது யாங் இரவு நேரப் பணியில் இருந்த காரணத்தால், அந்த அழைப்பை ஏற்க முடியவில்லை.இதனால் யாங் மீது கோபம் கொண்ட அவரது கணவர், மனைவி வேலை செய்யும் இடத்திற்கு நேரில் சென்று சண்டையிட்டுள்ளார்.மேலும் இந்த சண்டையின் போது, அந்த நபர் யாங்-ன் மூக்கை கடித்து தின்றுவிட்டதாக சீன பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், யாங்கின் மூக்கு கிட்டத்தட்ட முற்றிலுமாக போய்விட்டது என்றும் அவரது மூக்கு சரியாக இயங்க தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படவேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மூக்கை கடித்து தின்றது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் பொலிசார் யாங்கின் கணவரை பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.இதற்கிடையே யாங் அவருடைய கணவர் திருமணம் செய்துக் கொண்டபோதே விவாகரத்து செய்துக் கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்