உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


பசங்க 2 படத்தில் சிறு வேடத்தில் அல்லாமல், 40 நிமிடங்கள் வரக்கூடிய முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூர்யா.

சூர்யா, அமலாபால், பிந்துமாதவி மற்றும் பல்வேறு சிறு குழந்தைகள் நடிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘பசங்க-2′. சூர்யாவின் 2டி நிறுவனம் வழங்க இயக்குநர் பாண்டிராஜ் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கிறார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இப்படத்தை வெளியிட இருக்கிறார்.

‘ஹைக்கூ’ என்று தலைப்பிடப்பட்டு இருந்த இப்படம் வரிச்சலுகை காரணங்களுக்காக சமீபத்தில் தான் ‘பசங்க-2′ என பெயர் மாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க குழந்தைகளைச் சுற்றிய நிகழும் கதையில் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார் சூர்யா என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால், சூர்யா இப்படத்தில் சிறு வேடத்தில் எல்லாம் நடிக்கவில்லை.

படத்தில் சுமார் 40 நிமிடங்கள் வரக்கூடிய தமிழ்நாடன் என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. குழந்தைகளை முன்னிறுத்தி நகரும் கதை என்பதால் யாரும் சூர்யாவின் படம் என்று நினைத்துவிடக் கூடாது என்பதால் இதனை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.

விரைவில் இசை வெளியீடு, படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறது ‘பசங்க- 2′ படக்குழு.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்