Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitled நண்பரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு பிரித்தானியால் சிறைத்தண்டனை விதிக்கப்படடுள்ளது.குறித்த நபர் உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருந்தபோது அவரை தலையில் தாக்கி உயிரிழக்கச் செய்துள்ளதாக அவர் மீது பொலிஸார் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த அருணாச்சலம் அருனோதயன் என்ற 48 வயது நபர் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இவரது உயிரிழப்பு தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 34 வயது கிரிதாஸ் சிறிஸ்கந்தராஜாவிற்கு 32 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக வோர்விக் க்ரவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விபத்து ஒன்றில் காலில் படுங்காயமடைந்த அருன் என அழைக்கப்படும் அருனோதயன், அவரது மனைவியுடன் போல்ஸ்ஹில் வீதியில் வசித்து வந்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி மூன்று பேருடன் அருனோதயன் தங்கியிருந்து வீட்டிற்குச் சென்ற, குற்றவாளியாகக் காணப்பட்ட இலங்கையரான சிறிஸ்கந்தராஜா, அவரை தலையில் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்