உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Mecca_crane_2சவுதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் கிரேன் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. 180 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேன் ஒன்று முறிந்து பள்ளிவாசல் மீது விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து குறித்து மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது ஹஜ் காலம் என்பதனால் உலகின் பல பகுதிகளில் இருந்தும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் அங்கு கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்