உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்DSC_0755-600x399சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனக்கோரி முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.மேற்படி போராட்டம் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தரப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

நேற்று சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு முல்லைத்தீவு தனியார் பஸ் நிலையத்தில் ஒன்று கூடிய அரசியல் கைதிகளின் குடும்பத்தினர்கள் மற்றும் பொது மக்கள் அங்கிருந்து ஊர்வலமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக சென்று அங்கிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி போராட்டமானது மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் சகாயம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரது தலைமையில் இடம்பெற்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்