உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


திமுக சார்பில் தயாரிக்கப்படும் குறும்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் ஸ்டாலின்.

”முடியட்டும். விடியட்டும்” என்பதுதான் திமுக வின் தற்போதைய பிரசார கோஷம். வருகிற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, இதே தலைப்பில் திமுக ஒரு பிரச்சார குறும்படம் ஒன்றை தயாரிக்கிறது. இந்த குறும்படத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படம், அதிமுக அரசில் தற்போது நாட்டில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அமையும் எனத் தெரிகிறது. மேலும், மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்த போது செய்த சாதனைகள், சமிபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட கூட்டங்கள் பற்றிய விவரங்கள் இதில் இடம்பெறுகிறது. இதன் பெரும்பாலான படப்பிடிப்பு காட்சிகள் கிழக்கு கடற்கரை சாலையில் படமாக்கப்படுகிறது.

திமுக வின் பிரச்சார படமாக வெளிவரப்போகும் இந்த குறும்படம் கலைஞர் தொலைக்காட்சியில், தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன்பே வெளியாக உள்ளது. ஸ்டாலின் ஏற்கனவே 1987-ல் கலைஞர் கதை, வசனம் எழுதிய ”ஒரே ரத்தம்” எனும் திரைப்படத்தில் புரட்சிகரமான இளைஞராக நடித்தார். மேலும் தூர்தர்ஷனில் வெளிவந்த “குறிஞ்சி மலர்” எனும் தொடரிலும் நடித்திருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் நடிக்க இருக்கும் இந்த குறும்படத்தை திமுக.வினர் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்