Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



imagesஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள  விசாரணை அறிக்கை தொடர்பில் பதற்றமடையவில்லை ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இந்திய விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர், தி ஹிந்து ஊடகத்திற்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைக் குழுவின் அறிக்கையினால் இலங்கை அரசாங்கத்திற்குள் அதிர்வுகள் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையை இன்று வெளியிடவுள்ள நிலையில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையின் பிரதி ஒன்று ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, இலங்கையில் தமிழர்களுக்கு போதிய அரசியல் அதிகாரம் அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினை, தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து  இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுசார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இலங்கை அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு தமிழர்களுடன் அரசியல் அதிகாரப் பகிர்வு செய்து கொள்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்