Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்2010 மார்கழியில் நடைபெற்ற பனிகால ஒன்றுகூடலின் போது நோர்வே வாழ் காலையடி சாந்தை பனிப்புலத்து மக்களின் முதலாவது நிர்வாகம் அம்மக்களால் தெரிவுசெய்யப்பட்டது. 
╬ நிர்வாக உறுப்பினர்கள் விபரம் வருமாறு ╬

தலைவர் : விஸ்வலிங்கம் கோபாலக்கிருஷ்ணன்
►உபதலைவர ; : தம்பையா தனகோபால்
►செயலாளர் : விஐயரட்ணம் வி
ஜிதானந்தன்
►உபசெயலாளர் : சிறிஸ்கந்தராசா சிறிறஞ்சன்
►பொருளாளர் : கனகசபை சிவசுப்பிறமணியம்
►உபபொருளாளர் : கோபாலக்கிருஷ்ணன் கஜேந்திரன்
►கலைப்பொறுப்பாளர் : சின்னத்துரை ஜெயராஐன்
►உபகலைப்பொறுப்பாளர் : தம்பையா ஆனந்தகோபால்
இவர்களுடன் நிர்வாக உதவியாளர்களாக பதின்நால்வர்; தெரிவுசெய்யப்பட்டனர்.
நிர்வாக உதவி உறுப்பினர்கள் விபரம் வருமாறு:
►சி.பவாணி பூ.சிவகுமார்
►அ.ஜெயதீபா த.ஜெகதீஸ்வரன்
►கி.சுனித்தா மோகனதாஸ்
►சா.சுகித்திரா நிசாந்தன்
►வி.றதனி கருணாகரன்
►சற்குணா சி.சிவகுமார்
►இ.சுரேந்திரன் சி.சிவானந்தம்
ஆலோசகர்கள் ஆக, ப.மகேஸ்வரன், ந.கலைவாணி|யும் தெரிவு செய்யப்பட்டனர்.

23.01.02011 அன்று நடந்த முதலாவது நிர்வாகக்கூட்டம் சிறிஸ்கந்தறாஐh சிறிறஞ்சன் வீட்டில்நடைபெற்றது.
அமர்வின்போது, பின்வரும் விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன:
╬ நிர்வாகத்திற்கான விதிமுறைகள்
╬ அங்கத்தவர் பணம்
╬ எமது நோக்கம்
╬ அமைப்பிற்கான பெயர், இலட்சினை, பாடல்
╬ சித்திரைவருடப்பிறப்பு செய்வாதகவும் அண்றயதினமே பொதுச்சபைக் கூட்டமும் நடைபேறும்.
►குறிப்பு: இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வரும் பொதுச்சபைக் கூட்டத்தில் விவாதத்திற்கு விடப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டதன் பின்பு வெளிவிடப்படும்;!
நன்றி.
நிர்வாகம் 2011

17 Responses to “நோர்வே வாழ் காலையடி சாந்தை பனிப்புலத்து மக்களின் முதலாவது நிர்வாகம்”

 • panippulam kallai panpaddu samugamunneta sangam:

  புலம் பெயர்வாழ் எங்களின் அமைப்புக்கள் அனைத்தும் பிறந்தமண்ணின் பெயரும் அவைகள் சமூகமுன்னேற்ற சங்கம் என முடிவுள்ள பெயருடனும் அதன் யாப்புக்கள் ஊர் வேலைத்திட்டங்களை கொண்டதாயும் இருக்கவேண்டும்.யாப்பில் பொதுகோட்ப்பாடுகள் எல்லா நாட்டின் அமைப்புக்களும் கடைப்பிடிக்கவேண்டும்.அந்தந்தநாட்டின் சூழ்நிலைகள் மக்கள் தொகை என்பன கவனத்தில்கொண்டு யாப்பு தயாரித்து ஒரு கட்டுக்கோப்புடன் நடாத்தும்போது பல கேள்விகளுக்கு விடைகிடைக்கும். நன்றி பணிப்புலம் கலை பண்பாட்டு சமூகமுன்னேற்ற சங்கம் DENMARK

 • புதிதாக மலர்ந்த நோர்வே எம்மூர் அமைப்பானது,தங்களின் அமைப்பை பண்டத்தரிப்பு என்று அழைப்பது கவலையை அளிக்கின்றது.எனக்கு வேந்தன் அண்ணன் கூறியவிடயம் நல்லதாகத் தென்படுகின்றது.இதை தங்களின் நிர்வாகத்தினரின் கவனத்தில் கொண்டுவருமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றேன்.நன்றியடன் கெங்கா கனடா

 • T.BALAKUMAR:

  நோர்வே வாழ் எம்மவர்கள் பணிப்புலம் வாழ் மக்கள் எழுதுவதற்க்கான தயக்கம் என்ன.நாங்கள் பண்டத்தரிப்ப என்று எம்மை அடையாளப்படுத்துவது எமது தாய்தந்தையை அடையாளம் காட்ட விரும்பாதவர்களாகும்.பிறந்தமண்ணையும்,பிறந்த ஊரையும் ஏன் மறைக்கமுனைகிறீர்கள்.நோர்வே வாழ் மக்கள் பணிப்புலம் என அடையாளப்படுத்தவேண்டும். பாலா

 • T.BALA:

  மக்களில் ஒருவன் கேட்ட கேள்வி நியாயம் ஆனால் கேட்டஇடம் தான் பிழை.இது இப்போ ஒரு குழந்தை அது தவள்ந்து,தத்திதத்தி எழுந்து நடந்து தன் பணிகளை படிப்படியாக தான் செயற்ப்படவேண்டும்.ஆனால் உங்கள் தனி அனுபவம் ஊரை நோக்கி செல்லுமா ,செல்கிறதா,செய்வீர்களா? பாலா

 • p.a.s.s.nillayam:

  நோர்வே மக்களின் இந்த முயற்ச்சிகள் வெற்றிபெறவேண்டும்.கட்டமைப்பு ஊரைநோக்கி செல்வதே ஒரு நோக்கமாகவேண்டும்.மற்றவைஇரண்டாம் வேலையாகும்.நிர்வாகத்தினர் பலர் அனுபவசாலிகளாக இருப்பதால் பல நல்ல செயற்ப்பாட்டுக்களை எதிர் பார்க்கின்றோம்.நன்றி பணிப்புலம் சன சமூக நிலையம்

 • makkalill oruvan:

  மேற்படி வாழ்த்துக்களும், கருத்துக்களும் வழங்கிய மக்களின் எதிர்பார்ப்புகளிற்கு முற்றிலும் மாறுபாடான தீர்மானத்தை மேற்படி நிர்வாகத்தினர் எடுத்திருப்பதாக அறியமுடிகிறது.
  எனவே மேற்படி நிர்வாகத்தினர் தங்கள் படங்களை இணையத் தளங்களில் வெளியிட்டு விளம்பரம் செய்வதை விடுத்து தங்கள் நோக்கத்தையும், ஊர்மக்கள் வளர்ச்சிக்காக என்ன செய்யப்போகிறோம் என்பதை புது வருடம் வரை காத்திராது உடனடியாகத் தெளிவுபடுத்துமாறு நோர்வே வாழ் ஊர் மக்களில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன்.
  நன்றி!

 • நோர்வே எம்மூர் உறவுகள் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் புதிய அமைப்புக்கு வாழ்த்துக்கள். பண்கலைப்பண்பாட்க்கழக நோர்வேக் கிளை என்றும் சுவிஸ்க் கிளையென்றும் டென்மார்க் கிளையென்றும் ஜேர்மன் கிளையென்றும் பெயர் சூட்டினால் மிக நன்றாக இருக்கும் என்று நம்புகின்றேன். சூட்டி சுப்புறு மணியன் முகம் கண்டு மகிழ்ச்சி. ஏனைய நண்பர்களையும் இணைய வழி கண்டதில் மகிழ்ச்சி. ஊர் கூடித்தேர் இழுப்போம். ஒன்றிணைவோம் வாருங்கள்.

 • காலையடி மறுமலர்ச்சி மன்றம்:

  இம்முயற்சி மிகப்பெரிய முயற்சி.வாழ்த்துக்கள். தங்கள் நிர்வாகத்தினூடாக மறுமலர்ச்சி மன்றத்தின் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கம் நோர்வே வாழ் பணிப்புலம் சாந்தை காலையடி மக்களின் உபயமாக அமைக்கப்படவேண்டும் என்பது எமது நீண்டகால கனா. நோர்வேயில் உள்ள மன்ற தோற்றக்கால நிர்வாகிகளில் ஒருவரும் மூத்த தலைவருமான தனகோபால் அவர்கள் இதற்கு வழிகாட்டுவார் என நாம் எதிர்பார்த்து தங்களது ஐக்கியப்பட்ட உதவிகள் எமக்கு கிடைக்கும் போது செட்டிகுறிச்சியும் குஞ்சன் கலட்டியும் எமது கிராமத்தில் உள்ளடங்கும் என்பதை மறந்து விடலாகாது எனக்கூறி தங்களது உதவுகரத்தை அரவணைத்து… அழ.பகீரதன் தலைவர், மறுமலர்ச்சி மன்றம்

 • Chandrahasan:

  மிக மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. புலம் பெயர்ந்த தமிழர்களால் தாயகத்தில் ஆக்கவும் முடியும் என நிறுவ ஒரு உதாரணமாக வளர வாழ்த்துக்கள். பழையன கழித்து புதியன புகுத்தி புகுந்த நாட்டை போல் புலத்தையும் புதுப்பொலிவுடன் வளர்த்திட ஆவன செய்வீர்.

 • Chandrahasan:

  மிக மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. புலம் பெயர்ந்த தமிழர்களால் தாயகத்தில் ஆக்கவும் முடியும் என நிறுவ ஒரு உதாரணமாக வளர வாழ்த்துக்கள். பழையன கழித்து புதியன புகுத்தி புகுந்த நாட்டை போல் புலத்தையும் புதுப்பொலிவுடன் வளர்த்திட ஆவன செய்வீர்.

 • விசு.க.விமலன்.:

  நோர்வே வாழ் எம்மவர்கள் இதுபோன்ற கட்டமைப்பினை உருவாக்கியமைக்கு வாழ்த்துக்கள். 2001ஆம் ஆண்டுக் காலப்பகுதியளவில் பண்கலை பண்பாட்டுக்கழகத்தின் கிழைகள் புலம்பெயர்வாழ் சகல நாடுகளிலும் உருவாக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சில நண்பர்களுடன் கலந்தாலோசித்தபோது அன்றைய நிலையில் போதிய அளவில் மக்கள் தொகை இருக்காமையினாலும், அத்துடன் நம்மவர் பரந்தளவில் வெவ்வேறு பிரதேசங்களில் வாழ்ந்தமையினாலும் இது சாத்தியப்படாது இருந்த்து. முக்கியமாக யேர்மன் நாட்டில் நம்மவர் கூடுதலாகப் பரந்துபட்டு வாழ்வதனால் இது சாத்தியப்படாது போயிருந்த்து. அண்மையில் ஒரு சில நண்பர்கள் இம் முயற்ச்சியில் இறங்கியிருந்தார்கள் என அறிந்ததில் மகிழ்ச்சி. தோடர்ந்தும் டென்மார்க், பிரித்தானியா, பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகளிலும இப்படியான கட்டமைப்புக்கள் உருவாக வேண்டும். முக்கியமாக நிர்வாக ஒழுங்கனைப்புத் தேவை.

 • L.Sathiyaseelan (Seelan Digital Photos Swiss):

  அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.
  2011 ஆம் ஆண்டில் பாதம் பதிக்கும் புதிய நிர்வாகம் நிலத்திலும் புலத்திலும் நல்ல சேவைகள் செய்யவேண்டி வாழ்த்துகின்றேன்.
  Seelan Swiss

 • Pulen:

  2011 ஆம் ஆண்டில் முதல் பாதம் பதிக்கும் நோர்வே நம்மூர் அமைப்பு
  வாழ்த்துக்கள்.
  தம்பிமுத்து புலேந்திரன்
  கனடா

 • வாழ்த்துக்கள் !!!புதிய நிர்வாகம் புலத்திலும் ,நிலத்திலும் நல்ல சேவைகள்
  செய்யவேண்டி வாழ்த்துகிறேன்.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  வாழ்த்துக்கள். ஒற்றுமை ஓங்குக

 • bala:

  உங்கள் ஒன்று கூடல் அருமை.எந்த ஒரு கட்டமைப்பும் தனிய அந்தந்த நாட்டில் எங்களுடன் சம்மந்தமற்ற விளாக்களும் அதே நேரம் விதம் விதமான உணவுப்பரிமாற்றமும், ஆடல்.பாடல் இப்படி அரைத்த மாவையே அரைக்காமல் ஊரை நோக்கி பாதைகள் அமைக்கவேண்டும்.நிகழ்ச்சிகளும் ஊரின் சிந்தனை வெளிப்பாடும் கொணரப்படவேண்டும். நன்றி ப.ச.ச.நிலைய வெளிநாட்டு தொடர்பாளர் பாலா

 • 2011 ஆம் ஆண்டில் முதல் பாதம் பதிக்கும் நோர்வே நம்மூர் அமைப்பு பல ஆண்டுகள் ஒன்றாக தடம் பதித்து வெற்றி நடை போட்டு வலம் வர பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா மனதார வாழ்த்துகின்றது.அனைத்து நிர்வாகிகளுக்கும் எம் வாழ்த்துக்கள். பிரியமுடன்.
  தலைவர் பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்