உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledமல்லாவி ஒட்டறுத்தகுளம் பகுதியில் நேற்று  இரவு இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 35 பேர் படுகாயமடைந்தனர். கிளிநொச்சியிலிருந்து ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸும் வவுனியாவில் இருந்து பனங்காமம் நோக்கிச் சென்ற பஸ்ஸும் ஒட்டறுத்த குளம் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

காயமடைந்தவர்கள் மல்லாவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்