Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledகொட்டதெனியாவ பகுதியில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் படுகொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் யாழ்ப்பாணம் – பேரூந்து நிலையத்திற்கு முன்பாக, இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்துகொண்டதுடன், பாலியல் வன்முறை வழக்குகளை இழுக்கடிக்காதே, தாமதிக்காமல் நீதி வழங்கு, போதைப் பொருள் பாவனையை நிறுத்து, பாலியல் குற்றங்களுக்கு தனிநீதிமன்றம் அமர்த்து, படுகொலை செய்யப்பட்ட சேயாவிற்கு நீதி வழங்கு உள்ளிட்ட பதாதைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொட்டதெனியாவ பிரதேசத்தில் கடந்த 11ஆம் திகதி 5 வயது சிறுமியான சேயா செதோமி கடத்தப்பட்டு, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த சிறுமியின் சடலம் அவரது வீடடிலிருந்து 300 மீற்றர் தூரத்திலுள்ள ஓடை ஒன்றிற்கு அருகிலிருந்து மீட்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவனும், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த கும்பஸ்தர் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், குறித்த சிறுமியின் படுகொலையைக் கண்டித்து பல்வேறு இடங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்