Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledபங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக நடமாடும்பொழுது சாதாரண மனிதர்களை அரசியல் கைதிகள் என தடுத்து வைத்திருப்பதில் எவ்வித பயனும் இல்லையென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக சிறைகளில் வாடும் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றனர், அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அதில் எவ்வித சிக்கல்களும் ஏற்படப் போவது இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்தக் காலங்களில் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் இன்று சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது, இவர்களை மாத்திரம் அரசியல் கைதிகள் என்ற பெயரில் விசாரணைகள் இன்றி தடுத்து வைத்திருப்பது அரத்தமற்ற செயல் எனவும் கூறியுள்ளார்.

விடுதலை புலிகளின் செயற்பாடுகளுக்கு நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தவர்களும் கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் உள்ளிட்ட சில உறுப்பினர்களும் சுதந்திரமாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகளை விசாரணைகள் இன்றி நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்