உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்துனிசியாவை தொடர்ந்து அதிபர் பதவி விலக வலியுறுத்தி எகிப்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கடந்த 23 ஆண்டுகளாக அதிபராக இருந்த பென் அலி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதார சீரழிவு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து அவர் பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதை தொடர்ந்து அவர் பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறி சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இதே நிலை தற்போது எகிப்திலும் ஏற்பட்டுள்ளது. அங்கு முபாரக் அதிபராக உள்ளார். இவர் கடந்த 30 ஆண்டுகளாக இந்த பதவியை வகித்து வருகிறார். இவரது ஆட்சியில் நாட்டில் பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது.

எனவே அதிபர் போஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும். மேலும் நாட்டின் பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தலைநகர் கெய்ரோவில் நடந்தது. இதை தொடர்ந்து அங்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டகாரர்களை கட்டுப்படுத்த போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

கண்ணீர் புகை குண்டு களை வீசினர். இருந்தும் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு நடைபெறும் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்து கலவரமாக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்