உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


புலி படம் தொடர்பாக விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை உடனடியாக சரி செய்துவிட துடிக்கிறாராம் விஜய்.

புலி படத் தயாரிப்பாளர்களிடம், “எல்லா கணக்கையும் கேட்டு வாங்குங்க. யாருக்கும் பைசா பாக்கியில்லாமல் செட்டில் பண்ணிடலாம். அடுத்த படம் வெளியாகும்போது ரொம்ப ஸ்மூத்தா வெளியாகணும். அந்த நேரத்தில் ஒருவர் கூட வந்து லேப் வாசலில் வந்து நின்று முட்டுக்கட்டை போடக் கூடாது” என்று கூறிவிட்டாராம்.

இது ஒருபுறமிருக்க புலி நன்றாக ஓடும் என்ற நம்பிக்கையில் சில தினங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய ‘ருத்ரம்மாதேவி’ படத்தின் தமிழ் வெளியீட்டை அக்டோபர் 16 க்கு தள்ளிப் போட்டிருந்தார் முரளி ராம.நாராயணன். இப்போதும் புலியும் காத்தாட ஆரம்பித்துவிட்டது.

இன்னும் ஒரு வாரத்திற்கு தியேட்டரை ஹோல்டு பண்ணியாகணுமே என்கிற சிக்கலும் சேர்ந்து கொள்ள, ஒரே வழி புலிதான் என்ற  முடிவுக்கு வந்திருக்கிறார்கள். நொண்டி புலியா இருந்தாலும் வேற வழியில்லாமல் ஒண்டி புலியாதான் ஓடிட்டு இருக்கு!

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்