உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


ஒரு இசையமைப்பாளருக்கு ஒரு பாடல் மாஸ் ஹிட்டாகி விட்டால் அடுத்தடுத்த பாடல்கள் அவ்வளவு சீக்கிரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறாது.

ஆனால் அனிருத் விஷயத்தில் அப்படியில்லை. அவர் இசையமைக்கிற எல்லாப் பாடல்களும் அடுத்தடுத்து ஹிட்டாகி வருகின்றன.

அனிருத் இசையமைப்பில் ரிலீசான நானும் ரௌடிதான் மற்றும் வேதாளம் இரண்டு படங்களின் பாடல்களும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

விஜய்சேதுபதி – நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் நானும் ரௌடி தான் படத்தின் பாடல்கள் இரண்டு வாரத்திற்கு முன்பு ரிலீசாகி யூத்களுக்கு மிகவும் பிடித்த ஆல்பமாக இருந்தது.

இப்போது படமும் ஹிட்டாகியிருப்பதால் பாடல்கள் இன்னும் பாப்புலராகி விடும்.

அதனைத் தொடர்ந்து அஜித்துடன் முதல்முறையாக அனிருத் இணைந்திருக்கும் வேதாளம் படத்தின் பாடல்கள் கடந்த வாரம் ரிலீஸாகி தல ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கும் ஆல்பமாக வேதாளம் படத்தின் பாடல்கள் உள்ளன.

இப்படி அடுத்தடுத்து இரண்டு பெரிய படங்களின் பாடல்கள் ஹிட்டாகியிருப்பதால் புதுப்பட வாய்ப்புகளும் தேடி வர ஆரம்பித்திருக்கின்றன.

இதனால் எப்போதும் இல்லாத உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறார் அனிருத்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்