Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



imagesWEZM4ZGYசிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட மாட்டாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இன்று மாலை 5 மணிக்கு விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் சிலர், தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன், சிறைச்சாலைகள் அமைச்சர் திலக் மாரப்பன, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் பொலிஸ்மா அதிபர் இளங்ககோன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இது தொடர்பாக     கருத்து தெரிவித்த சிறைச்சாலைகள் அமைச்சர் திலக் மாரப்பன,

சிறைச்சாலைகளில் எவ்வித விசாரணைகளுமின்றி இதுவரைக்காலமும் வழக்கு தொடரப்படாமல் இருக்கும் சந்தேக நபர்களுக்கு வழக்கு தொடர அடிப்படை காரணிகள் இருந்தால் வழக்கு தொடருமாறு பிரதமரால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பணிக்கப்பட்டது.

அத்துடன் வழக்கு தொடரப்படாதிருப்போரிடையே குற்றச்சாட்டுகள் இன்றிய நபர்களுக்கு பிணை வழங்க முடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து விடுவிக்க முடியும் என்ற நிலைப்பாடு இருந்தால் அவர்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.

அதேவேளை கடந்த சில தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 220க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் வேண்டுகோளான பொது மன்னிப்பு என்ற விடயம் தொடர்பாக பிரதமர் கருத்து தெரிவித்தார்.

தமிழ் அரசியல் சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என்பதை உறுதியாக தெரிவித்த பிரதமர், அவர்களது வழக்கு விசாரணை மற்றும் விசாரணை செயன்முறைகளை விரைவுபடுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் மேலும் தெரிவித்துள்ளார் – என்று அமைச்சர் கூறினார்.

இதேவேளை தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்வரும் சில வாரங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மீண்டுமொரு கலந்துரையாடல் நடைபெறும் என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்