உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கனடாவின் கேப் பிரெட்டன் பகுதியில் இரண்டு வயது அழகான குழந்தை ஒன்று விற்பனைக்குத் தயாராக இருப்பதாக ஆன்லைனில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தை கண்ட கேப் பிரெட்டன் போலீஸ் குழந்தையின் வீட்டுக்கு விரைந்துள்ளனர். திடிரென வீட்டிற்கு வந்த போலீஸ் கூறிய தகவல்களைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார் குழந்தையின் தாய்.

தாயிடமும் ஆன்லைன் விளம்பரத்தை காவல்துறையினர் காண்பித்துள்ளனர். முதலில் வீட்டின் கதவை தட்டிய போலீஸ் அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் அவருக்கு இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தை உள்ளதா எனவும் அப்படி இருப்பின் அந்த குழந்தையை காட்டுமாறும் கூறியுள்ளனர்.

இந்த விடயங்கள் எதற்காக போலீசுக்குத் தேவைப்படுகிறது என தாய் கேட்ட பிறகே கிஜி எனப்படும் வணிக ரீதியிலான இணைய தளத்தில் குழந்தை விற்பனைக்குத் தயாராக உள்ள விளம்பரம் படத்துடன் வெளியாகியுள்ளதை அந்த பெண்ணிடம் கூறியுள்ளனர்.

தான் எப்போதும் குழந்தையின் அருகிலேயே இருப்பதாகவும் இது எப்படி நடந்தது என்றே தனக்குத் தெரியவில்லை என்று தாய் கூறியதோடு இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு போலிசை கேட்டுக் கொண்டுள்ளார்.

உடனடியாக இணையதளத்தில் வெளியான விளம்பரம் நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த இணைய முகவரியிலிருந்து இந்த விபரங்கள் இணையதளத்தில் போடப்பட்டுள்ளது என்பதை கண்டறிவதில் போலீஸ் முனைப்புடன் இறங்கியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்