உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்imagesஅரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் சத்தியாக் கிரக போராட்டம் நடத்தப்படும் என சிவில அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய முன்னணி ஆகியன கூட்டாக இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளன.

எதிர்வரும் நவம்பர் மாதம் 7ம் திகதிக்கு முன்னதாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு விடுதலை செய்யப்படாவிட்டால் சத்தியாக கிரக போராட்டம் அல்லது உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி எதிர்வரும் 29ம் திகதி மருதானையில் தேசிய மாநாடு ஒன்று நடத்தப்பட உள்ளதாக சிறைக் கைதிகளின் உரிமைக்கான அமைப்பின் அழைப்பாளர் சட்டத்தரணி செனக பெரேரா தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் 7ம் திகதி கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்