உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledமட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை விதிக்கப்பட்ட எட்டு கைதிகள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சிறைச்சாலையின் கூரை மீதேறி போராட்டம் நடத்தினர். சிறைச்சாலையில் தாங்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்துவருவதாகவும் தமக்கு நீதி வேண்டும் எனவும் கோரியே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் தம்மை பார்க்கவரும் உறவினர்களும் கெடுபிடிகளுக்கு உள்ளாவதாக போராட்டத்தில் பங்குகொண்டோர் தெரிவித்தனர்.

சிலருக்கு சிறைச்சாலையில் பல சலுகைகள் அளிக்கப்படுவதாகவும் தாங்கள் துன்புறுத்தப்படுவதாகவும் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இவ்விடத்திற்கு நீதிபதிகளான என்.எம்.அப்துல்லாஹ் மற்றும் ஏ.எம்.ஏ.றியாழ் ஆகியோர் வந்து எம்முடன் பேசவேண்டுமெனவும் கைதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் இவர்கள் அரசியல் கைதிகள் அல்ல இவர்கள் கப்பம் பெற்றமை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காக சிறைத் தண்டனை வழங்கப்பட்டவர்கள் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.எம.றியாழுடன் தொலைபேசியில் பேசியதையடுத்து, அவர் திங்கட்கிழமை மாலை சிறைச்சாலைக்கு வருவதாக தெரிவித்தார்.

பின்னர் கைதிகள் கூரையிலிருந்து கீழே இறங்கினர். இப் போராட்டத்தையடுத்து சிறைச்சாலைக்கு முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்