Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கிளிநொச்சி மாவட்டத்தில் சில தனியார் கல்வி  நிலையங்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில்  இயங்கி வருவதாக  அறியமுடிகிறது. எனவே அவ்வாறான கல்வி நிலையங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே  அரச அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறுவர் சிறுமிகளின் நலன்கள் அவர்களின் பாதுகாப்பு என்வற்றை பேணும் வகையில் தனியார் கல்வி நிலையங்கள் இருக்க வேண்டும் ஆனால் கிளிநொச்சி சில தனியார் கல்வி நிலையங்களில் மலசல கூட வசதிகள் கூட இல்லாம் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. இதனால் மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே தனியார் கல்வி நிலையங்கள் உரிய அடிப்படை வசதிகளோடு இயங்க வேண்டும் அவ்வாறில்லை எனில் குறித்த தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிவித்த அரச அதிபர் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் நிலைமைகள் மற்றும் அதன் அடிப்படை வசதிகள் குறித்து தனக்கு அறிக்கை சமர்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்