உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இணைய உறவுகள் அனைவருக்கும்
பணிப்புலம் இணையத்தின் anigifஇனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

6 Responses to “தீபாவளி நல்வாழ்த்துக்கள்”

 • appavai:

  எம் இனம் விடுவு கிடைக்காமல் அழுது கொண்டு இருக்குது …….எப்படி இது எம் இனத்துக்கு தீபாவளி ஆகும் …எத்தனை அரக்கர்கள் அழிபட வேண்டியவர்கள் இன்னும் இருக்குறார்கள்

  • ravi:

   அந்தஅரக்கர்களை உருவாக்கியது யார் ? நாம் தானே!!அதற்கான தண்டனையைத்
   தான் நாம் இப்போது அனுபவிக்கின்றோம்.விதைக்கப்படுவது எதுவோ அதுவே விளைந்து
   பயன் தரும் .

 • Teenuga Navaratnam:

  நான் சிறுவனாக இருந்த பொழுது தீபாவளி அன்று வெடிகள் வெடித்ததில் அத்தனை ஆனந்தம்.

  திராவிடனாகிய நரகாசூரனை ஆரிய அவதாரங்கள் கொன்றதால் ஜனங்கள் சந்தோஷப்பட்டு விளக்கு வைத்து, ஒளி ஏற்றி, பட்டாசு வைத்து அந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். திராவிடர்கள்(தமிழர்கள்) தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற நாள் தான் தீபாவளி. அநேகர் எனக்கு “தீபாவளி வாழ்த்துக்கள்” கூறினார்கள். தீபாவளி போனஸ், வெடி, சிறப்பு சலுகை என கொண்டாட்டம் களை கட்டுகிறது. ஆனால் இந்த தீபாவளியின் பின்னணி வரலாறைப் படித்த போது திகைத்துப் போனேன்.

  முன்பொரு காலத்தில் ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டானாம். படைப்புத் தொழிலை செய்வதற்கு பூமி இல்லையே என்று கவலைப்பட்ட பிரம்மா விஸ்ணுவிடம் முறையிட்டாராம். விஸ்ணு பன்றியாக மாறி அரக்கனோடு சண்டை போட்டு அவனை கொன்று பூமியை மீட்டாராம். பூமிக்கு தன்னை மீட்ட பன்றியின் மீதே காதல் வந்துவிட்டதாம். பன்றியும் சரியென்று சொல்ல இருவரும் உறவு கொண்டார்களாம். அதனால் ஒரு பிள்ளை பிறந்ததாம். அவன்தான் நரகாசுரன் என்ற அரக்கனாம். அவன் தவம் செய்து தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றானாம்.

  வரம் பெற்ற அரக்கன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினானாம். கடைசியில் விஸ்ணு கிருஸ்ணனாகவும் பூமாதேவி சத்தியபாமாவாகவும் அவதாரமெடுத்து நராகசுரனோடு போரிட்டார்களாம். கடைசியில் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவனுடைய தாயாகிய சத்தியபாமாவால் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளியாம். இப்படி ஒரு ஆபாசமான புராணக் கதையைக் அடிப்படையாகக் கொண்டு இந்த தீபாவளியை ஆரியப் பார்ப்பனியம் தமிழர்களுக்குள் திணித்தது. உருண்டையாக இருக்கின்ற பூமியை எப்படி பாயாக சுருட்டலாம் என்றோ, பூமியிலே இருக்கின்ற கடலுக்குள் எப்படி பூமியையே ஒளித்து வைக்கலாம் என்றோ, பூமியாலும் பன்றியாலும் உறவு கொள்ள முடியுமா என்றோ கேள்விகளை எழுப்ப முடியாதபடி தமிழினத்தை மடமைக்குள் தள்ளியது. இது இராமாயணம் சொல்லும் கதை.

  கதையல்ல நிஜத்திற்கு வருவோம். இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? பாரத கண்டத்தின் வரலாறு என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர்கள் எனப்படுகின்ற *தமிழர்கள்* ஆண்டு கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பை வந்தேறு குடிகளான ஆரியர்கள் மெது மெதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு, மொழி ஆக்கிரமிப்பும், பண்பாட்டு ஆக்கிரமிப்பும் நிகழந்தது. ஆரியர்களின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழர்கள் நீண்ட காலம் வீரப் போர் புரிந்தார்கள். இந்தப் போர்கள்தான் புராணக் கதைகளில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போர்களாக வர்ணிக்கப்படுகின்றன.

  சுர பானம் (தீர்த்தம்) அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சுர பானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். நராகசுரன் = நர+அசுரன். இது திராவிட மன்னர்களை சித்தரிக்கும்படி ஆரியர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு கதாப்பாத்திரம் ஆகும். அத்துடன் அசுரர்கள் தெற்கே வாழ்பவர்கள் என்றும் புராணக் கதைகளில் குறிப்பிடப்படுகிறார்கள். கிருஸ்ணனும் சரி அதற்கு முந்தையவனாக சொல்லப்படுகின்ற இராமனும் சரி, அசுரர்களை அழிப்பதற்கு தெற்கு நோக்கி படை எடுத்து வந்ததாகவே ஆரியர்களின் புராணங்கள் சொல்லுகின்றன. அசுரர்கள் கறுப்பாக இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள்.

  ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை கூறுகின்ற கதையே இராமயணம். அன்று தமிழ் மண்ணை ஆண்ட மன்னன் இராவணனாக உருவகப்படுத்தப்படுகிறான். ஆக்கிரமிப்பு போர் நடத்திய ஆரியர்களின் மன்னனாக இராமன் இருக்கின்றான். தமிழ் மண்ணின் பல பகுதிகளை கைப்பற்றி தமிழ் மன்னர்களை ராமன் வெற்றி கொள்கிறான். கடைசியில் தமிழர்களின் தலைநகரான இலங்கை வரை சென்று பல சூழ்ச்சிகள் செய்து இராவணனையும் கொல்கிறான். இதுதன் இராமயணக் கதை. இராவணனை பேரரசனாகக் கொண்டே அன்று தமிழர்களின் அனைத்து அரசுகளும் இருந்தன என்பதை இராமாயணத்தை ஆராய்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது.

  இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள். கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள். இறுதியில் முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமான பற்களும் முளைத்து அரக்கர்கள் ஆகி விட்டார்கள்.

  ஆரியர்கள் தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையோ தீபாவளியாக கொண்டாட வைத்து விட்டார்கள். ஜாதிபாகுபாடு, நம்ப முடியாத காமெடி கதைகள் என அள்ளிவிட்டு மக்களை முட்டாளாக்கி வைப்பதற்கென்றே ஆரிய பார்ப்பினிய கூட்டம் உள்ளது.

  • nakkeeran:

   உங்கள் ஆதங்கம் நியாயாயமானதே .ஆனால் புராணக் கதைகள் உண்மைக்கதைகள் அல்லவே .புராணங்கள் இந்துசமைய தத்துவங்களை சாதாரண பாமர மக்களும் கடைப்பிடிக்கக் கூடியதாக உரூ வாக்கப் பட்ட கதைகளையே கூறுகின்றன .குறிப்பாக ஒரு ஆன்மாவை அறவழியில் வாழ்ந்து இறைவனை அடைய விடாது (ஈடேற விடாது )தடை செய்வது மும் மலங்களாகிய ஆணவம் ,கன்மம் ,மாயை ஆகியனவாகும் .இம்மூன்று மலங்கலையே கொடும் அசுரர்களாகச்சித்தரித்து அசுரர்களை இறைவன் அழிப்பதாக புராணங்களில் கதைகள் உருவாக்கப் பட்டுள்ளன .இறைவன் ஆரியனோ திராவிடனோ இல்லை .அப்படி எந்தப் புராணத்திலும் கூறப்படவில்லை .இறைவனை வழிபடும் மக்களே ஆரியராகவும் திராவிடராகவும் உள்ளார்கள் .இறைவன் அருள் ஆரியருக்கும் திராவிடருக்கும் வேறுவேறாக இல்லை .எனவே புராணங்கள் மக்களை வையத்தில் வாழ்வாங்கு வாழ வைக்க எழுந்த கதைகள் என்ற உண்மையை அறிந்தோமானால் நாம் தோல்வியை கொண்டாடுகிறோம் என்னும் இழி சொல் நீங்கிவிடும் என்பது என்கருத்து .
   அடுத்து உங்கள் கவலை திராவிடனை வெற்றிகொண்ட ஆரியனை நாம் வாழ்த்துகிறோம் என்பது .அந்த இடத்தில் பார்க்கும் போது திராவிடனும் ஒருகாலத்தில் உலகம் முழுவதையும் தன ஆட்சிக்குள் வைத்திருந்தான் எனத் தெரிகிறது .இலங்கையை ஆண்ட மன்னன் இராவணன் அரக்கன் என்பது ராமாயணம் கூறும் குணனலப் பெயராகும் .ராவணன் உண்மையில் இயக்கன் என்பதே சரியான பதமாகும் .ஏனெனில் ஆரிய நூலான இலங்கை வரலாற்றைக் கூறும் மகாவம்சத்தில் விஜயன் இங்கு வரும்பது இங்கு ஆட்சி செய்தவர்கள் இயக்கர்கள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது .இவர்கள் (குவேனி )இராவணின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும் .இதனாலேயே இயக்கர்களை மனிதர்கள் இல்லையெனவும் இவர்கள் பிசாசுகள் (அமானுச்யர்கள் )என மகாவம்சம் கூறுகிறது .இக்கருத்தும் ராவண மக்களின் தோற்றத்தை ராமாயணம் வர்ணிப்பதிலும் இருந்து அறியமுடிகிறது .

   பூமிக்கும் பன்றிக்கும் உறவு ஏற்ப்பட முடியுமா என்னும் உங்கள் சந்தேகத்துக்கு ஒருசம்பவம் மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது இன்று எம்மை ஆட்டிப்படைக்கும் ஒரு இனம் சிங்கத்துக்கும் மனிதனுக்கும் பிறந்த வம்சமே என மகாவம்சம் கூறுகிறது .இதுகும் ஒரு புராணக் கதையே .இது அந்த இனம் எப்படி ஆரம்பமானது எப்படி வளர்ந்தது என்பதை வர்ணிக்கும் புராணமாகும் .எனவே தீபாவளிக் கொண்டாட்டம் ஆரியர் வெற்றி என்னும் காழ்ப்புணர்ச்சியுடன் பார்ப்பதை விட்டு இறைவன் இன மத பேதமற்றவன் என்னும் நோக்கில் பார்ப்போமாக .

 • T:RAVI:

  தீபாவளி திருநாள் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் கொண்டாடும் சிறப்பான பண்டிகையாகும். மக்கள் தங்கள் வாழ்வில் இருளைப் போக்கி, ஒளியை ஏற்றும் தீப ஒளி திருநாளாக இதைப் போற்றுகிறார்கள். இந்த இனிய நாளில் தங்களின் துன்பங்கள் நீங்கி, செழிப்பான வாழ்வு வாழ, வழிபிறக்க என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 • Vinothiny Pathmanathan:

  இனிய உறவுகள்
  அனைவருக்கும் தித்திக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்