உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவார்கள் என வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் ஜனாதிபதி மைத்திரபால சிறசேன உறுதியளித்துள்ளார்.தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் தான் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் தங்கியிருப்பதாக ஜனாதிபதியிடம் எடுத்து கூறியதாகவும் இதேவேளை கைதிகள் விடுதலை தொடர்பில் தான் எதிர்நோக்கும் விடயம் தொடர்பிலும் ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாகவும் வடமாகாணசபை மற்றும் மீன்பிடி அமைச்சர் பா. டெனீஸ்வரன் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.

இதேவேளை கட்டம் கட்டமாக தமிழ் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மிடம் உறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மாத்திரமன்றி வடமாகாகண அபிவிருத்தி தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எடுத்து கூறப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்