உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மோசடி செய்து நகைகளை விற்ற, கூவில் கீரிமலை பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவரை நேற்று புதன்கிழமை இரவு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.குறித்த பெண், திருமண வைபவத்திற்கு அணிந்து விட்டுத் தருவதாகக் கூறி, அயல் வீடுகளில் கடந்த 7ஆம் திகதி நகைகளை  வாங்கியுள்ளார்.

வாங்கிய நகைகளை உரிமையாளர்களிடம் மீளவும் வழங்காமல் ஏமாற்றி வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த பெண்ணை, நேற்று கைது செய்துள்ளனர்.
வாங்கிய நகைகளை யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக் கடை ஒன்றில் அடகு வைத்து அதன் மூலம் பெற்ற பணத்தை கணவரின் மதுபான செலவுக்கு வழங்கியதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்