உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஉண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலியுறுத்துமாறு கோரி திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில், வாக்குறுதி வழங்கியதால்தான் தமிழ் மக்கள் அதிகமான வாக்குகளை பதிவு செய்ததாகவும் கருணாநிதி குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 200 இற்கும் அதிகமான அரசியல் கைதிகள் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மக்கள் அமைதியான முறையில் போரட்டங்களை ஆரம்பித்துள்ளனர். கடந்த 13 ஆம் திகதி வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதி எங்கும் வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழர்கள் விடயத்தில் மத்திய அரசு இனியும் காலதாமதம் செய்தால் வரலாறு மன்னிக்காது என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்