உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


நீண்டகாலமாக இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் தம்மை விடுவிக்க வேண்டும் என்று உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் சற்று முன்னதாக எட்டு தமிழ் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு விசேட நீதவான் நீதிமன்றத்தில் இன்று இவர்களின் வழங்கு விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் புலிச் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில்பலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரையில் சுமார் இருபதுபேர் வரையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் மருத்துவத்திற்கு மறுத்து வருகின்றனர்.

இன்றைய தினம் கைதிகள் விடயம் தொடர்பில் பதில் அளிப்பதாக இலங்கை ஜனாதிபதி வடக்கு முதல்வருக்கு வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் இன்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கைதிகள் விவகாரம் தொடர்பில் விசேட கூட்டம் நடைபெறுகின்றது.

இதில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்