
இதேவேளை கிழக்கு மாகாணம் உள்ளிட்ட இலங்கை தீவு முழுவதும் சுமார் 81ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் 714 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வெள்ள அனர்த்த்ததால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் கிராம அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக மாவட்ட செயலக தகவல்கள் கூறுகின்றன.
இன்றைய தினம் வடக்கு மாகாண பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதுடன் பாதிக்கப்பட்டவர்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதுடன் அவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் உடைகள் வழங்கப்படுகின்றன. இதில் அரச செயலகங்களுடன் பல்வேறு அமைப்புகளும் இணைந்துள்ளன.
இதேவேளை இன்று காலை முதல் மழை பெய்யவில்லை. தற்போது பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வழிந்தோடி வற்றி வருகின்றது. எனினும் தற்போதும் போக்குவரத்துக்கள் சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும் மேகம் மழை பெய்வதான வாய்ப்புடன் தென்படுகின்றது.
இதேவேளை தொடர்ந்தும் சில தினங்களுக்கு சீரற்ற காலநிலை நீடிக்கும் என்று வளி மண்டவிலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வடகிழக்காக தாழமுக்கம் காணப்படுவதால் தொடர்ந்தும் மழை பெய்யும் வாய்ப்பிருக்கதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறுகிறது.
இதேவேளை மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் இன்று மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.