உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


kondavil_bite_002யாழ்.குடாநாட்டிலிருந்து பெண்களை காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்று பெண்களின் கற்பையும், நகைகளையும் சூறையாடிய முஸ்லிம் நபர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு கட்டிவைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்றைய தினம் காலை யாழ்.கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் நல்லூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலிப்பதாக கூறி கொழும்பு அழைத்துச் சென்று அங்கு அந்த பெண்ணை சில தினங்கள் வைத்திருந்து, பின்னர் பெண்ணிடமிருந்த நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு பேருந்தில் யாழ்ப்பாணம் ஏற்றி விட்டு மாயமாகியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பெண்ணுடன் பேசிய குறித்த நபர், தான் அரபு நாடு ஒன்றுக்கு செல்லவுள்ளதாக கூறியதுடன் நீயும் என்னுடன் வரலாம் ஆனால் பணம் கொஞ்சம் தேவை என கூறியுள்ளார்.

இந்நிலையில் சுதாகரித்த பெண் குறித்த நபரை யாழ்ப்பாணம் வருமாறு அழைத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிலரின் உதவியுடன் மடக்கி பிடித்துள்ளதுடன்,

மின்கம்பத்தில் கட்டிவைத்து நையப்புடைத்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில் குறித்த நபர் பெண்களை ஏமாற்றி கற்பையும், நகைகளையும் சூறையாடுவதை தொழிலாகவே செய்து வருவதாக தெரிவித்துள்ளதுடன், இந்த நபரினால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்