தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


untitledபாரிஸ் நகருக்கு அண்மையில் உள்ள ( 93 ) சென் செண்டனி பகுதியில் குண்டுகளுடன் தீவிரவாதிகள் அதிகமான வீடுகள் உள்ள கட்டடம் ஒன்றினுள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்,இதில் பெண் தீவிரவாதி ஒருவர் தன்னைத்தானே வெடிக்க வைத்துள்ளனர்.அத்துடன் தற்ப்பொழுது பொலிசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி மோதல்கள் நடைபெற்று வருகின்றது.

இது வரை இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஒரு தீவிரவாதி பொலிசாரின் சினைப்பர்  தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் மற்றொரு தீவிரவாதியான பெண் மனித வெடிகுண்டாக வெடிக்க வைத்துள்ளார் ,இந்தத் தாக்குதலில் 3 பொலிசார் காயமடைந்துள்ளனர்  ,

சென்ற வாரம் குண்டு வெடிப்பு நடந்த stade de france மைதானத்திலிருந்து  தீவிரவாதிகள் வசித்து வந்த வீடு 800 மீற்றர் தொலைவிலேயே இருந்துள்ளது குறிப்பிடத் தக்கது, 13 ம் இலக்க மெட்ரோ பூட்டி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

93 பகுதியில் உள்ள பல பாடசாலைகள் பூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.செண்டனி செல்லும் அனைத்து பஸ், மெட்ரோ , RER , TRAM என்பன மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.சென் செண்டனி பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர் என்பதுவும் குறிப்பிடத் தக்கது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்