தமிழில் எழுத
பிரிவுகள்


விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை பணிப்பெண் ஒருவரை கல்லெறிந்து கொலை செய்ய சவுதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு, மருதானைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்த பெண் ஒருவருக்கே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சவுதியில் பணி புரியும் மற்றுமொரு இலங்கை ஆணுடன் இவர் தகாத உறவு வைத்திருந்துள்ளார். இந்த இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 100 கசை அடிகள் வழங்க தீர்ப்பளித்துள்ளது.தனக்கு எதிரான குற்றச்சாட்டை குறித்த பெண் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, குறித்த பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை குறைக்குமாறு வெளிவிவகார அமைச்சர் தலதா அதுகொரல சவுதி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்