உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்1737216132Untitled-1துருக்கி-சிரியா எல்லைப் பகுதிக்கருகே, சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ஜெட் விமானத்தை துருக்கி போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளது. துருக்கி நாட்டின் வான்வெளி விதிகளை அந்த விமானம் மீறியதே இந்த தாக்குதலுக்கு காரணம் என்றும் அது போர் விமானம் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை இவ்வாறு சுடப்பட்டது ரஷ்ய நாட்டு சுகோய்-24 வகை இராணுவ போர் விமானம் எனத் தெரியவந்துள்ளது.

துருக்கி இராணுவத்தால் வீழ்த்தப்பட்டது ரஷ்யாவின் சுகோய்-24 வகை போர் விமானம். ரஷ்யா அத்துமீறி துருக்கி எல்லைக்குள் நுழையவில்லை. விமானம் சுடப்பட்டபோது, ரஷ்ய விமானம், 6 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருந்தது என, இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்