உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்imagesசிரியாவில் ஐ.எஸ் ஆயுததாரிகளின் இலக்குகள் மீது தாக்குதல்களில் பிரித்தானியாவும் பங்கெடுப்பதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஆதரவளித்துள்ளது.10 மணித்தியாலங்கள் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தாக்குதல் நடத்துவதற்கு ஆதரவாக 397 பேரும் எதிராக 223 பேரும் வாக்களித்துள்ளனர்.

வாக்கெடுப்பு நிறைவுபெற்று சிறிதுநேரத்தில் சைப்பிரஸ்சிலுள்ள பிரித்தானிய விமானத் தளத்திலிருந்து நான்கு ஜெட் விமானங்கள் தாக்குதல்களில் பங்கெடுப்பதற்கென புறப்பட்டுள்ளன.எனினும் இந்த விமானங்கள் எங்கு தாக்குதல் நடத்தவுள்ளன என்பது தொடர்பான தகவல்கள் தெரியவரவில்லை.

இந்த வாக்கெடுப்பில் தொழிற்கட்சியைச் சேர்ந்த 66 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் டேவிட் கெமரன் எதிர்பார்த்ததை விட அதிக பெரும்பான்மையை பெற்றுள்ளார்.

நாட்டை பாதுகாக்க சரியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் டேவிட் கெமரன் கூறியுள்ள போதிலும், இந்த நகர்வு தவறான ஒன்றென எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்