உங்கள் கருத்து
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
 • rajah on
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
 • sivamany on
 • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
 • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Unavngivetசாந்தை பண்டத்தரிப்பினை பிறப்பிடமாகவும் ,திருக்கோணாமலை town  (snake  lane )ஐ  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செந்தில்மணி கதிரவேலஅவர்கள் 03/12/15 அன்று   காலமானார் .அன்னார் காலஞ்சென்ற சின்னையா கற்பகம் தம்பதிகளின் மூத்த மகளும் , காலஞ்சென்ற  வையாபுரி தம்பதிகளின் அன்பு மருமகளும் , காலஞ்சென்ற கதிரவேல்  அவர்களின் பாசமிகு மனைவியும் , காலஞ்சென்ற சந்திரகாந்தன் ,சந்திரகலா (திருக்கோணாமலை), காலஞ்சென்ற நவநீதன் ,நவயோகம் (லண்டன் )   ஐங்கரன் (கனடா )ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,தயாளினியின் பாசமிகு மாமியாரும் காலஞ்சென்ற மகாலிங்கம் ,  பரமேஸ்வரி (பூங்குஞ்சு),  ஏரம்பமூர்த்தி,மற்றும் சுந்தரலிங்கம் ,குலமணி (தெஹிவளை)  காலஞ்சென்ற தயாபரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ,தவமணி ,அப்புலிங்கம் (சிங்கப்பூர் )  கிரியாசக்தி,  நாகரத்தினம் ,காலஞ்சென்ற  செந்தில்ராசா ,குஞ்சம்மா காலஞ்சென்ற பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் , நிரஞ்சி,கிசாந்தன்,நிசாந்தன் ,நளாயினி தியாளினி மற்றும் கிசோத் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ,விதுஷனா ,சஜுரன் ஆகியோரின் அன்புப் பூட்டியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06/12/2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .தகவல் மருமகள் வினோதினி பத்மநாதன் டென்மார்க்

3 Responses to “மரண அறிவித்தல்”

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

  சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் ,திருக்கோணாமலை town (snake lane )ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செந்தில்மணி கதிரமலை அவர்களின் பிரிவுச் செய்தி அறிந்து மிகவும் துயருற்றோம். அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
  ஓம்சாந்தி…….. சாந்தி ……. சாந்தி…….
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே
  .

 • kunathilagam santhai:

  விநோவிடம் ஒரு வேண்டுகோள் ,மைத்துனர் வரிசையில் பார்க்கியம் (காலம் சென்ற )அவர்களை யும் சேர்ப்பது நல்லது .

 • kunathilagam santhai:

  சாந்தையில் எம் அயல் வீட்டில் பிறந்து வளர்ந்து பனிப்புலத்தில் வாழ்க்கைப்பட்டு திருமலையில் தம் வாழ்வை மகிழ்வுடன் நடாத்திய அமார் செந்தில்மணி அம்மா அவர்களுக்கு என் இறுதி அஞ்சலியை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சாந்தை விநாயகனை வேண்டி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் .

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்