உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இலங்கையி;ன் நிதி நிலைமைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இலங்கையின் நிதி நெருக்கடி நிலைமைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.நாட்டின் பெரும்பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள அதிகாரிகள் மிகச் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைத்தல், வியாபாரச் சூழ்நிலையை மாற்றியமைத்தல், திறந்த பொருளாதார கொள்கைகைள பின்பற்றுதல் போன்றவற்றின் ஊடாக ஆபத்துக்களை வரையறுத்துக்கொள்ள முடியும் என பரிந்துரை செய்துள்ளது.

இலங்கையின் தற்போதைய வரிக் கொள்கைகள், அபிவிருத்தித் திட்டங்கள் என்பனவற்றுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

எனவே, வரிக் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டியது மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்